கார்கள் நேருக்கு நேர் மோதல்; முதியவர் பலி


கார்கள் நேருக்கு நேர் மோதல்; முதியவர் பலி
x
தினத்தந்தி 16 May 2022 4:48 AM IST (Updated: 16 May 2022 4:48 AM IST)
t-max-icont-min-icon

கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முதியவர் உயிரிழந்தார்.

துவரங்குறிச்சி:

திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 76) உள்ளிட்ட 5 பேர் நேற்று ஒரு காரில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். கார் துவரங்குறிச்சி அருகே சென்றபோது சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்த மற்றொரு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று எதிரே வந்த ராமச்சந்திரனின் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார்களில் சென்ற 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதில், ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 10 பேரையும் மீட்டு மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story