விபத்தில் பெண் போலீஸ் காயம்


விபத்தில் பெண் போலீஸ் காயம்
x
தினத்தந்தி 16 May 2022 4:48 AM IST (Updated: 16 May 2022 4:48 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பெண் போலீஸ் காயமடைந்தார்.

திருச்சி:

திருச்சி ஜீயபுரத்தை சேர்ந்தவர் வித்யா. இவர் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து அவர் ஸ்கூட்டரில் பணிக்கு வந்தார். கரூர் பைபாஸ் ரோட்டில் கலைஞர் அறிவாலயம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story