மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி
மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
திருச்சி:
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் உலகநாதபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 52). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு உய்யகொண்டான் திருமலை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். வயலூர்ரோட்டில் குமரன்நகர் அருகே வந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கோவிந்தன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி மல்லிகா அளித்த புகாரின்பேரில், வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.