சைக்கிளில் சென்று ஆய்வு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு


சைக்கிளில் சென்று ஆய்வு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 15 May 2022 11:18 PM GMT (Updated: 2022-05-16T04:48:15+05:30)

சைக்கிளில் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

திருச்சி:

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் அவ்வப்போது அதிகாலை நேரங்களில் சைக்கிளில் சென்று ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நேற்று காலை அவர் சைக்கிளில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து திருச்சி மாவட்ட எல்லை வரை சென்று விபத்து நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர்களிடம் கலந்தாலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சைக்கிளில் சிறுகனூர் போலீஸ் நிலையத்துக்கு திடீரென சென்றார். அங்கு நிலுவையில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்களையும் கேட்டறிந்தார்.


Next Story