புகார் கொடுக்க வந்தவரிடம் பணம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்


புகார் கொடுக்க வந்தவரிடம் பணம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 16 May 2022 4:59 AM IST (Updated: 16 May 2022 4:59 AM IST)
t-max-icont-min-icon

புகார் கொடுக்க வந்தவரிடம் பணம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

ஆத்தூர்:

ஆத்தூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக மணிவேல் (வயது 54) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் விபத்து வழக்கு ஒன்றை சமரசம் செய்து வைப்பதாக கூறி, புகார் கொடுக்க வந்தவரிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை சூப்பிரண்டிடம் வழங்கினர். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவேலை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டார்.


Next Story