இளம்பெண் தற்கொலை
பொம்மிடி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மொரப்பூர்:
பொம்மிடி அருகே போதைகாடு கரியதாதனூரை சேர்ந்த காளி மகள் தீபா (வயது 24). இவருக்கும், சின்னமஞ்சவாடியை சேர்ந்த வெள்ளையன் மகன் காமராஜ் (30) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் காமராஜ், தன்னுடைய மனைவி தீபாவை, கரியதாதனூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் தீபா அங்கேயே தங்கி விட்டார். நேற்று காலையில் தீபா தன்னுடைய பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். உடனே தீபா உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் அவரது உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீபா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீபா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.