வனச்சரகர் உள்பட 3 பேர் பணி இடைநீக்கம்


வனச்சரகர் உள்பட 3 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 16 May 2022 12:28 PM IST (Updated: 16 May 2022 12:28 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வனச்சரகர் உள்பட 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாலக்கோடு:
மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வனச்சரகர் உள்பட 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மின்சாரம் தாக்கி யானை சாவு
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள நல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது நெல் வயலில் மின்வேலி அமைத்து இருந்தார். கடந்த 13-ந் தேதி காட்டு யானை ஒன்று சீனிவாசன் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கியது. அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அந்த யானை பலியானது.
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்த யானை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்த இடத்திலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டது.
3 பேர் இடைநீக்கம்
மின்சாரம் தாக்கி யானை இறந்தது தொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், மின்வேலி அமைக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத பாலக்கோடு வனச்சரகர் செல்வம், வன அலுவலர் கணபதி, வனக்காப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகிய 3 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி பிறப்பித்துள்ளார். மின்வேலி அமைக்கப்பட்டது தொடர்பாக விவசாயி சீனிவாசனை மாரண்டஅள்ளி போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story