பெண் தற்கொலைக்கு முயற்சி


பெண் தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 16 May 2022 4:59 PM IST (Updated: 16 May 2022 4:59 PM IST)
t-max-icont-min-icon

மதம் மாற்றத்துக்கு கட்டாயப்படுத்துவதாக பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,
மதம் மாற்றத்துக்கு கட்டாயப்படுத்துவதாக பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாக்குதல்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ்.மங்கலம் தாலுகா, கருப்ப குடும்பன் பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் என்பவரின் மனைவி வளர்மதி (வயது50). கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் தனது மகன் சதீஷ்குமார் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் வளர்மதி குடும்பத்தினரை அந்த பகுதியை சேர்ந்த ஒரு மதத்தினர் மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றார்களாம். 
மேலும், வளர்மதி மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தினார்களாம். இதுகுறித்து போலீஸ்நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று காலை வளர்மதி கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் தான் கொண்டு வந்து இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். 
உடனடியாக அங்கு இருந்த தீயணைப்புத்துறையினர் அவரை மடக்கி பிடித்து காப்பாற்றினர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் அங்கு விரைந்து வந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 
கோரிக்கை
இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் மனு கொடுக்க வருபவர்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் கலெக்டர் அலுவலகம் வாயிலில் சோதனை செய்து அதன்பின்னரே உள்ளே அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

Next Story