சுற்றுலாவேன் பனைமரத்தில் மோதி டிரைவர் பலி
தேனியில் இருந்து ராமேசுவரம் வந்த சுற்றுலா வேன் உச்சிப்புளி அருகே சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பனைக்குளம்,
தேனியில் இருந்து ராமேசுவரம் வந்த சுற்றுலா வேன் உச்சிப்புளி அருகே சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாமிதரிசனம்
தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வேன் ஒன்றில் ராமேசுவரம் கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய நேற்று வந்துள்ளனர். இவர்கள் வந்த வேனை அதே பகுதியை சேர்ந்த நவநீதன் (வயது48) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
20-க்கும் மேற்பட்டோருடன் வந்த இந்த வேன் உச்சிப்புளி ரெயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது வேகமாக மோதியது.
இதில் பனை மரம் முறிந்து கீழே விழுந்ததுடன் வேனின் முன்பகுதி முழுமையாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் நவநீதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரணை
வேனில் இருந்த 5 பேருக்கு படுகாயமும் மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து உச்சிபுளி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story