ஓரினச்சோ்க்கை ஆசைக்காட்டி டாக்டரிடம் விலை உயர்ந்த செல்போன் பறிப்பு- வாலிபர் கைது
ஓரினச்சேர்க்கை ஆசைக்காட்டி மாநகராட்சி ஆஸ்பத்திரி டாக்டரிடம் விலை உயர்ந்த செல்போனை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
ஓரினச்சேர்க்கை ஆசைக்காட்டி மாநகராட்சி ஆஸ்பத்திரி டாக்டரிடம் விலை உயர்ந்த செல்போனை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் பறிப்பு
மும்பையில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டருக்கு ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் செயலில் சமீபத்தில் வாலிபர் ஒருவர் அறிமுகம் ஆனார். இதில் கடந்த மாதம் 28-ந் தேதி வாலிபர், டாக்டரை பைகுல்லா பகுதிக்கு சந்திக்க வரச்சொன்னார். டாக்டரும் வாலிபர் கூறிய பகுதிக்கு சென்றார். அப்போது வாலிபருடன் மேலும் 2 பேர் இருந்தனர்.
அவர்கள் டாக்டரை தாக்கி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன், ரூ.1,500-ஐ பறித்து சென்றனர்.
வாலிபர் கைது
இதுகுறித்து பாதிக்கப்பட்ட டாக்டர் ஜே.ஜே. மார்க் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது டாக்டரிடம் ஓரினச்சேர்க்கை ஆசைக்காட்டி வரவழைத்து செல்போன், பணத்தை பறித்தவர் மும்ரா பகுதியை சேர்ந்த நதிக் சேக் (வயது21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவரை காவலில் எடுத்து இதே பாணியில் அவர் வேறு யாரிடமும் பணம், விலை உயர்ந்த பொருட்களை பறித்தாரா? என விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story