கோவையில் கோடை மழை குறைவு


கோவையில் கோடை மழை குறைவு
x
கோவையில் கோடை மழை குறைவு
தினத்தந்தி 16 May 2022 7:03 PM IST (Updated: 16 May 2022 7:03 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கோடை மழை குறைவு

கோவை

கோவையில் நடப்பாண்டில் கோடை மழை இயல்பை விட 50 சதவீதம் குறைவாக பெய்து உள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்து உள்ளார்.


கோடை மழை

ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் கோடை மழை பெய்கிறது. கோவையை பொறுத்தவரை ஆண்டுதோறும் சராசரியாக 130 மில்லி மீட்டர் அளவுக்கு கோடை மழை பெய்யும். இந்த ஆண்டு கடந்த மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் கோடையில் மழையின்றி பெரும்பாலும் வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கோடையை சமாளிக்க அதிகளவு தர்பூசணி, இளநீர், மோர், பழரசம் அருந்தி வந்தனர்.

ஆனால் மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதும் கோவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கோவையில் கோடை மழை 60.4 மி.மீ. அளவுக்கு பெய்து உள்ளது. 

மழை குறைவு

இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:-
தமிழகத்தில் தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை பெய்யும். இந்த பருவமழை தான் நமக்கு ஆதாரமாக உள்ளது. இதுதவிர மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களிலும் கோடை மழை பெய்கிறது. கோவையை பொறுத்தவரை இந்த ஆண்டு இயல்பை விட 50 சதவீதம் அளவிற்கு கோடை மழை குறைவாக பெய்துள்ளது.

 ஒரு நாளைக்கு 2.5 மி.மீ அல்லது அதற்கு மேல் மழை பெய்தால் மட்டுமே மழை நாளாக கணக்கிடப்படுகிறது.
இதன்படி பார்க்கும் போதுகோடை காலத்தில் 5 நாட்கள் மட்டுமே மழை பெய்து உள்ளது. கோடை காலம் முடிய இன்னும் 2 வாரங்கள் உள்ளன.கோடை மழை முடிந்ததும் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story