ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 19 பேர் காயம்
சமயபுரம் அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர்.
சமயபுரம், மே.17-
சமயபுரம் அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
சமயபுரம் அருகே மேட்டு இருங்களூரில் புனித லூர்து மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 582 காளைகள் பங்கேற்றன.
இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 320 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். முன்னதாக மருத்துவ குழுவினர் பரிசோதித்து தகுதிவாய்ந்த காளைகள், மாடுபிடி வீரர்களை மட்டுமே ஜல்லிக்கட்டு திடலுக்கு அனுமதித்தனர்.
நின்று விளையாடிய காளைகள்
முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு பிடித்தனர். சில காளைகள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் மைதானத்தை சுற்றி தனியாக நின்று விளையாடியது.
வீரர்கள், வீரத்துடன் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் தப்பி ஓடியது. இதில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
19 பேர் காயம்
இந்த போட்டியில் காளைகளை அடக்கியபோது வீரர்கள் மற்றும் வேடிக்கைபார்த்தவர்கள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். இரண்டு பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டையொட்டி லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல்படையினர் என 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story