கோத்தகிரி அருகே விபத்தில் வாலிபர் பலி
கோத்தகிரி அருகே விபத்தில் வாலிபர் பலி
கோத்தகிரி
கோத்தகிரி, சோலூர் மட்டம் அருகே உள்ள கரிக்கையூர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி என்பவரது மகன் தாசன் (வயது 18). இதே போல கோத்திமுக்கு கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் கார்த்திக் ராஜா (18). இருவரும் நண்பர்கள். 2 பேரும் ஸ்கூட்டரில் தங்களது வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஸ்கூட்டரை கார்த்திக் ராஜா ஓட்டியுள்ளார். தாசன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். ஸ்கூட்டர் பொம்மன் எஸ்டேட் பகுதியில் இருந்து மிகவும் தாழ்வான சாலையில் சென்று கொண்டிருந்தபோது நஞ்சப்பா வீதி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் பலமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தாசன் பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக் ராஜாவிற்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story