தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 May 2022 7:26 PM IST (Updated: 16 May 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

நாய்கள் தொல்லை
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கிழக்கு வாசல் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அந்த பகுதி மக்களும், கோவிலுக்கு வருபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் வாகனங்களில் வருபவர்களை கடிக்க துரத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
                                                                      -அசோக், திருவட்டார்.
சேதமடைந்த மின்கம்பம்
கேசவன்புதூர் லுத்தரன் ஆலயம் அருகே உள்ள கே.கே.நகரில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                 -பால்ராஜ், கேசவன்புதூர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட கோனசேரி பகுதியில் உள்ள சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                             -விக்னராஜன், கோனசேரி.
பட்ட மரங்கள் அகற்றப்படுமா?
திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட உண்ணியூர்கோணத்தில் இருந்து அஞ்சுகண்டறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் 5 கூந்தல் (உலத்தி) பனை மரங்கள் பட்டுப் போய்  நிற்கின்றன. இந்த பட்ட மரங்களின் அருகில் குடிசை வீடுகள் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்ட மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?. 
                                        -தேவசாயம்,  உண்ணியூர்கோணம்.
தெருவிளக்கு வேண்டும்
கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொட்டில்பாடு கிராமம் ஒனாரிஸ் காலனி உள்ளது. இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்படாததால் எப்போதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                             -குமார சுதன், கொட்டில்பாடு.
விபத்து அபாயம்
குளச்சல் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு சீம்பிளிவிளை பகுதியில் சாலை செல்கிறது. இந்த சாலையின் ஓரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்ைத சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                       -அபுதாஹிர், குளச்சல்.
குடிநீர் வினியோகிக்க வேண்டும்
பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பூதப்பாண்டி வல்லடைக்குடித்தெருவில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                           -பாரதி, பூதப்பாண்டி.

Next Story