தூத்துக்குடியில் அனல்மின்நிலைய என்ஜினீயர் வீட்டில் ரூ.2¾ லட்சம் நகைகள் திருட்டு


தூத்துக்குடியில் அனல்மின்நிலைய என்ஜினீயர் வீட்டில் ரூ.2¾ லட்சம் நகைகள் திருட்டு
x

தூத்துக்குடியில் அனல்மின்நிலைய என்ஜினீயர் வீட்டில் ரூ.2¾ லட்சம் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அனல்மின்நிலைய என்ஜினீயர் வீட்டில் ரூ.2¾ லட்சம் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
என்ஜினீயர்
தூத்துக்குடி தெர்மல்நகர் என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஊழியர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமணன் பந்திரி. இவருடைய மகன் ரமேஷ் பந்திரி (வயது 37). இவர் தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின்நிலையத்தில் துணை தலைமை என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6-ந் தேதி குடும்பத்துடன் தனது சொந்த ஊரான புனேவுக்கு சென்று உள்ளார்.
திருட்டு
அவர் நேற்று முன்தினம் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பி உள்ளார். அவர் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பந்திரி வீட்டின் உள்ளே சென்று பார்த்தாராம். அங்கு மர பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 9 பவுன் தங்க நகைகள், ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story