தொழில் போட்டி காரணமாக 7 எருமை மாடுகள் கொல்லப்பட்ட கொடூரம்
தானேயில் தொழில் போட்டி காரணமாக 7 எருமை மாடுகள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தானே,
தானே மாவட்டம் பிவண்டி, பந்தர் மொகல்லா பகுதியில் அர்காம் மொமின் என்பவருக்கு சொந்தமான மாட்டு தொழுவம் உள்ளது. நேற்று அதிகாலை தொழுவத்தில் உள்ள மாடுகளுக்கு தீவனம் போட தொழிலாளி சென்றார். அப்போது 7 எருமை மாடுகள் கழுத்து, கால் நரம்புகள் அறுக்கப்பட்டு கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் 15 மாடுகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தன.
இதுகுறித்து தொழிலாளி, உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். அவர் சம்பவம் குறித்து நிசாம்புரா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து எருமை மாடுகளை கொன்ற மர்ம நபரை தேடிவருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story