குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 16 May 2022 8:12 PM IST (Updated: 16 May 2022 8:12 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி:
குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இடையிடையே வெயிலும் அடித்தது. சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டியது. அருவிகளில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர்வாசிகளும் உற்சாகமாக குளித்து சென்றனர். நேற்று குற்றாலத்தில் ‘ஜில்'லென்று குளிர்ந்த காற்று வீசியது. காலையிலும், மாலையிலும் லேசாக சாரல் மழை பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்து மிதமாக விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். 


Next Story