புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது வழக்கு
ஆறுமுகநேரியில் புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பஜாரில் ரோந்து சென்றனர். அப்போது வடக்குத்தெரு முத்தாரம்மன் கோவிலுக்கு எதிர்புறம் ஆறுமுகநேரி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (வயது 25) என்பவரின் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், அவரது கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் ெசய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story