நெல் மூட்டைகளுடன் லாரி கிணற்றில் கவிழ்ந்து விபத்து
நல்லடிசேனை கிராமத்தில் நெல் மூட்டைகளுடன் லாரி கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சேத்துப்பட்டு
திண்டிவனத்தை சேர்ந்த வியாபாரிகள் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நல்லடிசேனை கிராமத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, அதை ஒரு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
லாரியில் 2 சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் உடன் வந்தனர். நல்லடிசேனை கிராமம் அருகே சென்ற போது திடீரென சாலையோரம் இருந்த கிணற்றில் நெல் மூட்டைகளுடன் லாரி பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் லாரி டிரைவர் பிரபு லேசான காயம் அடைந்தார்.
லாரியில் வந்த திண்டிவனத்தை சேர்ந்த சுமைத்தூக்கும் தொழிலாளர்களான குப்பன் (வயது 45), குமார் (46) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரும் சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நெல் மூட்டைகளுடன் கவிழ்ந்து கிடந்த லாரியை பார்வையிட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story