மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்
திருப்பூர்:
திருப்பூரில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
பணிநிரந்தரம்
திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
தமிழ்நாடு மின்வாரிய திருப்பூர் மின்பகிர்மான வட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அளித்த மனுவில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 250-க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி திருப்பூர் தொழிலாளர் ஆய்வாளரிடம் தொழிற்சங்கத்தின் சார்பில் மனு செய்துள்ளோம். எங்கள் மனு மீது விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படாமல் பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்ப்பு வழங்கி பணி நிரந்தரம் செய்ய மின்வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வக்பு வாரியம்
தமிழ்நாடு ஷரீஅத் வழக்கறிஞர்கள் பேரவை பொதுச்செயலாளர் முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், பள்ளிவாசல் வக்பு சொத்துகளின் விவரம் தவறான வகையிலும், மொத்த சர்வே எண் மட்டும் குறிப்பிட்டும், வக்பு சொத்தின் அளவீடுகள், ஆவண குறிப்புகள், சொத்து ஒப்படைக்கப்பட்ட விவரம், வக்பு சொத்தின் தற்போதைய காரியதரிசி ஆகிய எந்த விவரங்களும் இல்லாமல், சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், கலெக்டருக்கு தெரிவிக்காமல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆணையை பெற்றுள்ள சார்பதிவாளர்கள், பட்டிலில் குறிப்பிட்டுள்ள சர்வே எண்கள் முழுமையும் வக்பு சொத்து என தெரிவித்து விற்பனை செய்யவோ, வாங்கவோ கூடாது எனவும், கிரையம், அடமானம், வங்கி கடன் என எந்த ஆவணத்தையும் பதிவு செய்ய முடியாது எனவும் மறுத்துள்ளனர். இதற்கு உரிய விசாரணை செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story