விபத்தில் ஜனதாதளம் (எஸ்) பிரமுகர் சாவு


விபத்தில் ஜனதாதளம் (எஸ்) பிரமுகர் சாவு
x
தினத்தந்தி 16 May 2022 9:25 PM IST (Updated: 16 May 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் ஜனதாதளம் (எஸ்) பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெங்களூரு:

ஹாசன் டவுனை சேர்ந்தவர் மோசின். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் பிரமுகர் ஆவார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடந்த ஜனதா ஜலதாரே நிகழ்ச்சியில் மோசின் கலந்து கொண்டார். பின்னர் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதிகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் மோசின் தங்கி இருந்தார். 

இந்த நிலையில் நேற்று காலை, மாதிகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள சாலையை மோசின் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம், மோசின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட மோசின் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கூடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story