பொட்டல்புதூரில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
பொட்டல்புதூர் ஆற்றுப்பாலத்துக்கு அடியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
கடையம்:
ஆழ்வார்குறிச்சிக்கும், பொட்டல்புதூருக்கும் இடையே ராமநதி ஆற்றுப்பாலம் உள்ளது. அந்த ஆற்றுப்பாலத்துக்கு அடியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story