தம்பியை கல்லால் தாக்கி கொன்ற விவசாயி கைது


தம்பியை கல்லால் தாக்கி கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 16 May 2022 9:28 PM IST (Updated: 16 May 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

பெலகாவி மாவட்டம் கோகாக்கி கிராமத்தில், தம்பியை கல்லால் தாக்கி கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் ேகாகாக் தாலுகா சிக்கலாபுரா கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா பீமப்பா செலாய்(வயது33). விவசாயம் செய்து வந்தார். இவரது அண்ணன் வாசப்பா பீமப்பா செலாய். இவரும் விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் தம்பி மல்லப்பாவிற்கு விவசாயத்தில் அதிகளவு லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வீடு, கார், டிராக்டர் என்று சகல வசதியுடன் வாழ்ந்து வந்தார்.

   இது சகோதரர் வாசப்பாவிற்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி தம்பியிடம் வாசப்பா தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த தகராறு முன்விரோதமாக மாறியது. தம்பியை கொலை செய்ய வாசப்பா திட்டமிட்டார்.   இந்நிலையில் நேற்று முன்தினம் சகோதரர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வாசப்பா, கல்லால் தம்பி மல்லப்பாவை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வாசப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த கொலை குறித்து கட்டாபுரா போலீசார் வழக்குப்பதிந்து வாசப்பாவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.   அப்போது தம்பியின் வளர்ச்சி பிடிக்காமல் அவரை கொலை செய்திருப்பதாக வாசப்பா தெரிவித்தார். தொடர்ந்து வாசப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story