மாணவிகளுக்கு யோகா அறிமுக பயிற்சி
மாணவிகளுக்கு யோகா அறிமுக பயிற்சி
திருப்பூர்:
திருப்பூர் கருவம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில் திருப்பூர் குமரன் கல்லூரியில் பயிலும் 2ஆயிரத்து 500 மாணவிகளுக்கு ஸ்கை யோகா அறிமுக பயிற்சிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் வசந்தி தலைமை தாங்கினார். பேராசிரியர் ஆடிட்டர் மனோகர், பிரியா நாகராஜ் மற்றும் கருவம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் துணைத்தலைவர் வீரராகவன் ஆகியோர் பயிற்சிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மற்றும் ஆசிரியர் குழுவினர் இணைந்து இப்பயிற்சிகளை மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். முதல் கட்டமாக 250 மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒருவாரம் பயிற்சிகள் அளிக்கப்படும் என அறக்கட்டளை நிர்வாகிகளும், கல்லூரி நிர்வாகிகளும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story