திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம்


திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம்
x
தினத்தந்தி 16 May 2022 9:47 PM IST (Updated: 16 May 2022 9:47 PM IST)
t-max-icont-min-icon

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமியையொட்டி மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ஜோதி ஜோதி, வக்ரகாளி ஜோதி, ஜோதியை பார்த்தால் பாவம் தீரும்’ என பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன், செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமா சிவாச்சாரியார், குருக்கள் சேகர், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர். மகா தீபத்தையொட்டி, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

Next Story