விருத்தாசலத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து போலீஸ் விசாரணை


விருத்தாசலத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 16 May 2022 9:50 PM IST (Updated: 16 May 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்டனா். இதுகுறித்து போலீசாா் விசாாித்து வருகின்றனா்.


விருத்தாசலம், 


விருத்தாசலம் கடைவீதி அருகே தனியார் பிஸ்கட் ஏஜென்சி இயங்கி வருகிறது. இங்கு மேட்டு காலனியை சேர்ந்த வீரமணி, அரவிந்த், சிவகுரு ஆகியோர் பணி செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று இரவு இவர்கள் வேலை முடிந்து, தங்களது ஏஜென்சியில் இருந்து வெளியே வந்தனர். 


அப்போது, அவர்களது மோட்டார் சைக்கிள்களை அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தியிருந்தனர். இந்நிலையில், அந்த வழியாக வந்த ஜெயில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 20), என்பவர் 3 பேரிடமும் ஏன் வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளீர்கள் என கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன் தான் கையில் வைத்திருந்த கத்தியால் வீரமணி, அரவிந்த், சிவகுரு ஆகியோரை குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story