காங்கேயம் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு


காங்கேயம் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 16 May 2022 9:50 PM IST (Updated: 16 May 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

திருப்பூர்:
காங்கேயம் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கலெக்டரிடம் மனு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கயம் மறவபாளையம் ஊராட்சி செம்மண்குழிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எங்கள் குடியிருப்பு அருகில் கல்குவாரி உள்ளது. ஆட்சேபனை உரிமம் வழங்குவதற்கு முன்பே மறவபாளையம் கிராம நிர்வாக அதிகாரியிடம் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தோம். தற்போது புதிதாக கல்குவாரி அமைக்கும் முயற்சி நடக்கிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும்
 ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்கள் எங்கள் குடியிருப்புக்குள் வந்து விழுகிறது. குடியிருப்புக்கும் கல் குவாரிக்கும் இடையே 67 மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. இந்த கல் குவாரிகள் இயங்க தடை விதிக்க வேண்டும். அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story