கோடை வெயிலை விரட்டிய சாரல் மழை


கோடை வெயிலை விரட்டிய சாரல் மழை
x

வேலூரில் கோடை வெயிலை விரட்டும் வகையில் சாரல் மழை பெய்தது.

வேலூர்

கோடைக்காலத்தில் வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருப்பார்கள். நகர வீதிகள் மதிய வேளையில் வெறிச்சோடி காணப்படும். ஆனால் தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள அசானி புயலால் மழையும், அதனுடன் கூடிய குளிர்ச்சியும் வேலூரில் நிலவி வருகிறது.

சில நாட்களாக வேலூரில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. 100 டிகிரிக்கும் கீழ் பதிவாகி வருகிறது. வானமும் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. அவ்வப்போது லேசானது முதல் பலத்த மழை பெய்கிறது.
இந்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. நேற்று 91.9 டிகிரி வெயில் அளவு பதிவானது. இந்த நிலையில் மாலையில் திடீர் சாரல் மழை பெய்தது. சிறிது நேரம் பெய்த மழை பின்னர் 7 மணி அளவில் மீண்டும் லேசான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story