மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவியை மீனவர் களுக்கு ஒதுக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம்,
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவியை மீனவர் களுக்கு ஒதுக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
தங்கச்சிமடத்தில் நேற்று மீனவர்கள் சமுதாய ஆலோசனை கூட்டமானது பரதவ சமுதாய தலைவர் சாம்சன் தலை மையில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் சமுதாய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து இதுவரை மக்களவை உறுப்பினர்கள் 600 பேர்களில் தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டுமே மக்களவை உறுப்பினராக சென்றுள்ளார். தமிழகத்தில் இருந்து சென்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 260 பேர்களில் ஒருவர் மட்டுமே மீனவர். மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். மீனவர்களின் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூடுதலான மீனவர்கள் இல்லாத தால் மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின் றனர். இதனிடையே தமிழகத்தில் வருகிற ஜூன் மாதம் 10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடை பெறுகிறது. இந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மீனவர்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குமாறு கோரிக்கை வைக்கப் படுகிறது.
தொடர் உண்ணாவிரதம்
கடந்த 2018-ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப் படகுகளையும் உடனடியாக மீட்டு கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20 மற்றும் 21-ந்தேதி தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரே தொடர் உண்ணா விரத போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story