திண்டிவனத்தில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.71 ஆயிரம் அபேஸ்
திண்டிவனத்தில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.71 ஆயிரம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மேகலா (வயது 34). இவர் தனது தந்தையின் செல்போன் எண்ணை மொபிக்விக் என்ற செயலியுடன் இணைத்து சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவை தனது கணவரின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு மூலம் பதிவு செய்தார். அப்போது அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.967 பிடித்தம் செய்யப்பட்டு ரத்தாகியது. இதனால் அந்த தொகையை மீண்டும் தனது வங்கி கணக்கில் சேர்ப்பதற்காக கடந்த 13-ந் தேதியன்று இரவு மேகலா தனது தந்தையின் செல்போன் மூலம் கூகுளில் சென்று மொபிக்விக்கின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தேடியபோது கிடைக்கப்பெற்ற செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் கூறியபடி மேகலா, எனிடெஸ்க் என்ற செயலியை பதிவிறக்கம் செய்தார். பின்னர் அவர் தனது தந்தையின் கிரெடிட் கார்டை அந்த செயலியில் ஸ்கேன் செய்தவுடன் அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.71,652-ஐ மர்ம நபர் எடுத்துவிட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மேகலா, இதுபற்றி விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story