அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவன் பலி


அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவன் பலி
x

அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

பரமக்குடி, 
அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பிளஸ்-1 மாணவன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பங்களா ரோடு பகுதியை சேர்ந்தவர் லிங்கதுரை. இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு
3 மகன்கள்.. 
லிங்கதுரையும் அவரது மூத்த மகனும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். 2-வது மகன் கவின்குமார் (வயது 17) பரமக்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கவின்குமார் அவரது நண்பரின் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் கவின்குமார் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 
 வழக்குப்பதிவு
விபத்து பற்றி தகவல் அறிந்த பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பலியான கவின்குமார் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவின் குமாரின் தாயார் சுசீலா கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் விசாரணை நடத்தி, அரசு பஸ் டிரைவர் திருப்புல்லாணியை சேர்ந்த விஜயன் (49) மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story