ரூ.114½ கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி


ரூ.114½ கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி
x
தினத்தந்தி 17 May 2022 12:00 AM IST (Updated: 16 May 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே ரூ.114½ கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே ரூ.114½ கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் பால் பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரைதள கட்டிடத்தின் அளவையும், தரத்தையும் ஆய்வு செய்தார். அரசு விதிகளின்படி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறதா? எனவும் ஆய்வு செய்தார். விரைவாக முடிக்க வேண்டும்

மேலும், வரைபடத்தின் மூலம் ஒவ்வொரு தளத்திலும் அமையவுள்ள அலுவலகங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நாகவேலு மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஒப்பந்தக்காரர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story