இளம்பெண்ணை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த அண்ணன்-தம்பி கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 16 May 2022 10:18 PM IST (Updated: 16 May 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

மும்பை தாராவியில் இளம்பெண்ணை கத்திமுனையில் பலாத்காரம் செய்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 
மும்பை தாராவியில் இளம்பெண்ணை கத்திமுனையில் பலாத்காரம் செய்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். 
மிரட்டி கற்பழிப்பு
மும்பை வில்லே பார்லே பகுதியில் வசித்து வந்த சகோதரர்கள் அனில் சோகன் மற்றும் அவரது சகோரர் நிலேஷ் சோகன். இருவரும்  தாராவி பகுதியில் வசித்து வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணிடம் சகோதரர்கள் இருவரும் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது. 
 இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட சகோதரர்கள் அவரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு தனியான இருந்த பெண்ணை இருவரும் சேர்ந்து கத்தி முனையில் மிரட்டி கற்பழித்தனர். மேலும் இதை வீடியோவாக பதிவு செய்துகொண்டனர். 
கைது 
 மேலும் இந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமாவது  கூறினாலோ அல்லது போலீசாரிடம் தெரிவித்தாலோ ஆபாச படத்தை இணைய தளத்தில் பரப்பி விடுவோம் என அவர்கள் மிரட்டினர். இவர்களின் மிரட்டலுக்கு பயந்து போன அந்த பெண்ணும் சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்கவில்லை. 
 இந்த நிலையில் அவர்களின் தொல்லை அதிகரித்ததால்  சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். மேலும் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான சகோதரர்கள் இருவரையும் வலைவீசி தேடி வந்தனர். அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தினர். 
இதன்மூலம் மும்பை வில்லே பார்லேவில் பதுங்கி இருந்த 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story