கோடைகாலத்திலேயே நிரம்பிய மோர்தானா அணை
வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கோடைகாலத்திலேயே ேமார்தானா அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குடியாத்தம்
வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கோடைகாலத்திலேயே ேமார்தானா அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மோர்தானா அணை
குடியாதத்தை அடுத்த மோர்தானாவில் உள்ள அணை வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக விளங்குகிறது. இந்த அணை கடந்த 2000-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. சுமார் 11.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையில் ஒரு மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெய்த மழையால் அணை நிரம்பி வழிந்தது அதன்பின் பெய்த தொடர் மழையால் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வழிந்தோடியது. பல மாதங்களாக மோர்தானா அணை நிரம்பி காணப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கடுமையான கோடையால் வறட்சி காரணமாக மோர்தானா அணையில் நீர்மட்டம் 5 செ.மீ. அளவு குறைந்து 11.45 மீட்டர் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் எதிர்பாராமல் பெய்த தொடர்மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக கடந்த மே மாதம் 5-ந் தேதி 11.45 மீட்டராக இருந்த நீர்மட்டம் 10 நாட்களாக பெய்த 167 மில்லி மீட்டர் மழையால் 11.50 மீட்டர் முழு கொள்ளளவும் நிரம்பியது. தற்போது 31 கன அடிநீர் வெளியேறி வருகிறது.
உதவி கலெக்டர் ஆய்வு
இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் கோபி ஆகியோர் மோர்தானா அணை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் ஜிட்டப்பல்லி தடுப்பணையில் காட்டாற்று வெள்ளம் காரணமாக வெள்ளம் நிரம்பி வழிந்து ஓடுகிறது. கோடைகாலத்திலேயே அணை நிரம்பி உள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
Related Tags :
Next Story