டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்பு


டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 16 May 2022 10:29 PM IST (Updated: 16 May 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தடுப்பு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜகுமார் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சுபா, ஆனந்தராஜ், ஜுனைதுல், மனிஷா மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு, டெங்கு தடுப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். டெங்கு கொசு பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Next Story