உடுப்பியில் பட்டதாரி பெண் தற்கொலைக்கு பா.ஜனதா அரசு தான் காரணம்


உடுப்பியில் பட்டதாரி பெண் தற்கொலைக்கு பா.ஜனதா அரசு தான் காரணம்
x
தினத்தந்தி 16 May 2022 10:29 PM IST (Updated: 16 May 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

உடுப்பியில், வேலை கிடைக்காத விவகாரத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு பா.ஜனதா அரசு தான் காரணம் என உடுப்பி மாவட்ட காங்கிரஸ் தலைவர் அசாக் குமார் கொடவூர் கூறியுள்ளார்.


உடுப்பி:

2 கோடியாக உயர்த்த இலக்கு

  உடுப்பி (மாவட்டம்) தாலுகா, மூடுபெல்லே பகுதியை சேர்ந்தவர் சகானா தேவதிகா. இவர் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தார். இவர் பலமுறை அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைகளுக்கு முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் அவர் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

  அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் தனது சாவிற்கு அரசு தான் முழு காரணம் என இருந்தது. இதுகுறித்து உடுப்பி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  இந்த நிலையில் இளம்பெண் தற்கொலை குறித்து உடுப்பி மாவட்ட காங்கிரஸ் தலைவர் அசாக் குமார் கொடவூர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  வேலை கிடைக்காத காரணத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம் பா.ஜனதா அரசு தான். பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி இளைய சமுதாயத்தினர் கையில் தான் உள்ளது என கூறி வருகிறார். மேலும், நாட்டில் வேலைவாய்ப்பை அவர் 2 கோடியாக உயர்த்த இலக்கு வைத்திருப்பதாகவும் கூறிவருகிறார்.

பா.ஜனதா அரசு தோல்வி

  ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் பேர் வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டது அவருக்கு தெரியுமா?. மோடி ஆட்சியில் மணிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் வேலையில்லாமல் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் உடுப்பியை சேர்ந்த சகானாவும் ஒருவர். வேலை வழங்குவதில் பா.ஜனதா அரசு தோல்வி அடைந்துவிட்டது.

  70 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்களில் இளைஞர்கள் வேலை பெற்றனர். பா.ஜனதா அரசுக்கு ஊழல் செய்வதற்கே நேரம் சரியாக உள்ளது. பிறகு எவ்வாறு வளர்ச்சி பாதையை நோக்கி செல்வார்கள்.
  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story