இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 May 2022 5:10 PM GMT (Updated: 16 May 2022 5:10 PM GMT)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், 
நூல் விலை உயர்வு, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூரில் குமரன் சிலை முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு துணை மேயர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் நலிவடைந்து தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்து வருவது குறித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் பாதிப்படைவது குறித்தும் பேசினார்கள்.
மேலும் விசைத்தறி, பின்னலாடை, விவசாயி, தொழிலாளர் ஆகியோரின் நிலைமை இக்கட்டான நிலையில் உள்ளது என்பதை சித்தரிக்கும் வகையில் தூக்கு கயிற்றின் முன் முகமூடி அணிந்து 5 பேர் நின்றபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள்.
சைமா சங்க பொதுச்செயலாளர் எம்பரர் பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் ரவி, பொருளாளர் நடராஜ், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேகர், கவுன்சிலர் அருணாசலம், மாதர் சங்க நிர்வாகி பிருந்தா, 4-வது மண்டல தலைவர் வடிவேல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Next Story