விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2022 10:47 PM IST (Updated: 16 May 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் பழனிசாமி(வயது 58). விவசாய தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அக்கம்பக்கத்தினர் பழனிச்சாமியை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். வயிற்று வலி தாங்க முடியாமல் பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story