அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சிவகங்கை நகராட்சி ஆணையாளரை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், பணிநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சிவகங்கை நகராட்சி ஆணையாளரை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், பணிநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கண்ண தாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பாண்டி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துகுமார், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், வட்ட கிளை தலைவர் முத்தையா, உள்பட பலர் கலந்துகொண்டனர். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story