மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 16 May 2022 10:59 PM IST (Updated: 16 May 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 
நூல் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பருத்தியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும். பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கருர் மாவட்டக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், கந்தசாமி, ராஜாமுகமது, கரூர் மாநகர செயலாளர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story