நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 270 மனுக்கள் பெறப்பட்டன


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 270 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 16 May 2022 11:00 PM IST (Updated: 16 May 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 270 மனுக்கள் பெறப்பட்டன.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 270 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகா ராணி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story