லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் சிக்கினர்
arrested
பாலக்கோடு:
பாலக்கோடு பகுதியில் உள்ள பஸ் நிலையம், கடைத்தெரு பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அதில் கம்மாளர் தெருவை சேர்ந்த தினகரன் (வயது 49), விஜயகுமார் (29), ராஜ்குமார் (28) ஆகிய 3 பேர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் லாட்டரி சீட்டு, ரூ.580 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று மாரண்டஅள்ளி பகுதியில் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்த முனியம்மாள் கொட்டாய் பகுதியை சேர்ந்த ஏழுகுண்டன் (42) என்பவரை கைது செய்த மாரண்டஅள்ளி போலீசார் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story