மல்லசமுத்திரம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி சாவு
மல்லசமுத்திரம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பலியானார்.
மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரம் அருகே உள்ள மாமுண்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 50). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தென்பெண்ணை ஆற்றின் ஓரமாக தென்னை மரத்தில் தேங்காய் பறித்தார். பின்னர் ஆற்றின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அவர் அடித்து செல்லபப்ட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மல்லசமுத்திரம் போலீசார் விரைந்து சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாதேஸ்வரனை தேடினர். பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story