நாமக்கல்லில் ரூ.5¾ கோடியில் புதிய சந்தை அமைக்கும் பணி தொடங்கியது


நாமக்கல்லில் ரூ.5¾ கோடியில் புதிய சந்தை அமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 16 May 2022 11:02 PM IST (Updated: 16 May 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ரூ.5¾ கோடியில் புதிய சந்தை அமைக்கும் பணி தொடங்கியது.

நாமக்கல்:
நாமக்கல்லில் திருச்செங்கோடு சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் பின்புறம் தினசரி மற்றும் வாரச்சந்தை உள்ளது. இங்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 69 லட்சம் செலவில் புதிய சந்தை அமைக்கும் பணி நேற்று முன்தினம் பூமிபூஜையுடன் தொடங்கியது. புதிய சந்தை வளாகம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதால், அங்கு கடை வைத்துள்ள 160 வியாபாரிகளுக்கும் சந்தையின் முகப்பில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு கடை அமைக்கும் பணியில் நேற்று வியாபாரிகள் ஈடுபட்டனர். இதையொட்டி பழைய கடைகளை பிரித்து புதிய இடத்தில் கடைகளை அமைக்க தொடங்கி உள்ளனர்.
புதியதாக அமைக்கப்படும் சந்தை வளாகம் நவீன வசதிகளுடன் 172 கடைகள் ஒரே குடையின் கீழ் என்ற வகையில் பிரம்மாண்ட ஷட்டருடன் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான வசதிகள் இந்த சந்தை வளாகத்தில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Next Story