ராசிபுரத்தில் தானியங்கி சிக்னல்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
ராசிபுரத்தில் தானியங்கி சிக்னல்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
ராசிபுரம்:
ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. அதன்படி ராசிபுரம் புதிய பஸ் நிலையம், அங்காளம்மன் கோவில் தெரு, அஞ்சநேயர் கோவில் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்களை துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசிங் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story