இண்டூர் அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை


இண்டூர் அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2022 11:04 PM IST (Updated: 16 May 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

இண்டூர் அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

பாப்பாரப்பட்ட:
இண்டூர் அருகே உள்ள நத்தஅள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 36). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணணுக்கும், அவருடைய சகோதரர்களுக்கும் இடையே நிலம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த நிலையில் இருந்த கிருஷ்ணன் அவரது நிலத்துக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story