புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது
வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதியில் பெய்யக்கூடிய மழை நீரானது ஆற்றில் பெருக்கெடுத்து திம்மாம்பேட்டை வழியாக வந்து பாலாற்றில் கலக்கிறது. மேலும் வாணியம்பாடியை அடுத்த புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி வழியும் உபரி நீர் தற்பொழுது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த உபரி நீர் திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story