கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்
கன்னியாகுமரி,
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிைலயில் நேற்று காலையில் கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக 8 மணிக்கு தொடங்கவேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. பின்னர் கடல் இயல்வு நிலைக்கு திரும்பியதால் 2 மணி நேர தாமதத்துக்கு பிறகு 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வரிசையில் நின்று படகில் ஏறி விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றனர்.
இந்தநிலையில் பிற்பகல் 2.30 மணிக்கு சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் அவசரம் அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், படகு தளத்தில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கடந்த 2 நாட்களாக கடல் நீர்மட்டம் தாழ்வு, சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story