குமரியில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.45 அடியாக உயர்வு
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து ெபய்து வரும் மழையால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42.45 அடியாக உயர்ந்தது. இதையடுத்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து ெபய்து வரும் மழையால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42.45 அடியாக உயர்ந்தது. இதையடுத்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை நீடிப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலையில் சுட்டெரிக்கும் வெயிலும், மதியத்திற்கு பின் சாரல் மழையும் பொழிகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக புத்தன்அணை பகுதியில் 24 மில்லி மீட்டர் மழை பதிவானது. நேற்று நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான வெயிலுடன் வானத்தில் கார்மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன.
மலையோரம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளன.
வெள்ள அபாய எச்சரிக்கை
பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி ஆகிய அணைகளுக்கு வினாடிக்கு 1,129 கனஅடி நீர் வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 42.45 அடியாக உயர்ந்தது.
அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர்வெளியேற்றப்படுவதால் குழித்துறை தாமிரபரணி ஆறு மற்றும் கோதையாற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக திற்பரப்பு, குழித்துறை, தேங்காப்பட்டணம், களியல் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மழை அளவு
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி- 1.8, சிற்றார் 1- 13.4, களியல்- 6.6, கன்னிமார்- 13.2, குழித்துறை- 6, நாகர்கோவில்- 2.4, பெருஞ்சாணி- 22.8, பேச்சிப்பாறை- 14.4, தக்கலை- 8.2, குளச்சல்- 4.8, இரணியல்- 6.2, பாலமோர்- 15.4, மாம்பழத்துறையாறு- 6.4, கோழிப்போர்விளை- 12, அடையாமடை- 11, குருந்தன்கோடு- 4.6, முள்ளங்கினாவிளை- 12.8, ஆனைக்கிடங்கு- 5.4, முக்கடல் அணை- 3.4 என பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story