கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 26 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்


கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில்  26 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
x
தினத்தந்தி 16 May 2022 11:17 PM IST (Updated: 16 May 2022 11:17 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 26 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் 6 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள 26 குழந்தைகளுக்கு தன் சொந்த செலவில் வேர்க்கடலை உருண்டை, வேகவைத்த பச்சை பயிறு, பேரிச்சம்பழம், நெய் கலந்த கேழ்வரகு உருண்டை, வறுத்த பொட்டுக்கடலை அடங்கிய ஊட்டச்சத்து உணவு பெட்டகம் மற்றும் பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பேசினார். அப்போது ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் மீது தனிக்கவனம் செலுத்தி கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்கிட பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், மேலாளர் பார்வதி, தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆறுமுகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பிரியதர்ஷினி, மேற்பார்வையாளர்கள் ராணி, சாந்தி, செல்வி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சதீஷ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story